மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தியது

Contents:-
1. பொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள் – குருநாதர் பைத்தியம் போன்று இருந்துதான் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்
2. சொத்து சுகத்துடன் வாழ்ந்தவரின் கடைசி நிலை – குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றார்கள்…!
3. பழனியில் “பித்தரைப் போன்று” இருந்த நமது குருநாதர் “ஆண்டவன் என்றால்.., யார்…?” என்று எமக்குத் தெளிவாக உணர்த்தினார்
4. உயிரை அறிந்த நீ… “ஏன்டா பொய் உலகிற்குப் போகிறாய்…? மெய் உலகிற்கு வாடா…!” என்று கூப்பிட்டார் குருநாதர்
5. உடலை விட்டுப் பிரிந்தால் பிறவியில்லா நிலை அடைந்து விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற மெய்யை உணர்த்தினாலும் “ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள்… இல்லை…!” என்று வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்
6. நல்லது நமக்குள் வராது தடைப்படுத்துவது எது? எதனால்?
7. “வெளியிலிருந்துதான் நமக்குள் தீமை வருகின்றது” அதைத் தடுத்துப் பழகும் ஆற்றலை நாம் செயலாக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்
8. அன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து… நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…!” என்று உணர்த்தினார் குருநாதர்
9. ஞானத்தைப் போதிக்கும் குருவிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்?
10. குருநாதர் தன் கை கால்களில் கிழிந்த துணிகளைக் கட்டுவார் அது போல் செடி கொடி மரங்களிலும் துணிகளைக் கட்டுவார் – அதனுடைய சூட்சமும் மெய் ஞானத்தை உணர்த்தும் அவருடைய பரிபாஷையும்
11. காட்டுக்குள் அழைத்துச் சென்று பல இன்னல்களைக் கொடுத்துத்தான் “மகரிஷிகளைப் பற்றி…” உணர்த்தினார் குருநாதர்
1. பொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள் – குருநாதர் பைத்தியம் போன்று இருந்துதான் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்
எமது குருநாதர் பைத்தியக்காரராகத்தான் இருந்தார். எமக்குப் பல இம்சைகளையும் கொடுத்தார். இந்த இம்சை உனக்குள் எப்படி எல்லாம் வருகின்றது? உன்னை எப்படி அது இயக்குகிறது?
ஒவ்வொரு உணர்வின் தன்மை தன்னை அறியாமல் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பாசத்தால் உடலுக்குள் விஷமான அணுக்கள் எப்படி வளர்கின்றது. அதே சமயத்தில் கேட்டோர் உள்ளங்களில் அது எப்படி இயக்கச் செய்கின்றது?
அந்த உணர்வின் காந்தப் புலன்கள் கவர்ந்து நம்மைச் சுழன்று நிம்மதியற்ற நிலைகள் கொண்டு மீண்டும் ஆரம்ப நிலைகள் கொண்டு எப்படித் திருப்புகின்றது?
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் வழிகளை அன்று அந்த மெய்ஞானிகள் காட்டினார்கள். அதைத்தான் குருநாதர் பைத்தியம் போல் இருந்து அனுபவபூர்வமாகக் காட்டினார்.
பைத்தியக்காரர் போல் தான் நானும் இருந்து கொண்டு வருகின்றேன். (அவர் சொன்ன வழிகளில் தான்) முதலில் நான் வெறும் ஒரு துண்டும் வேஷ்டியும் மட்டும் தான் போட்டிருந்தேன்.
நீங்கள் வேறு விதமாக எண்ணிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அப்புறம் தான் வெள்ளைச் சட்டையைப் போட்டது.
ஒவ்வொரு நிமிடத்திலும் நமது நிலைகளில் பிறருடைய தீமைகளின் நிலைகளைக் கேட்காது விட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.
ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது நமக்கு எதற்கு இந்த வம்பு என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.
வாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். எதாவது ஒரு பொருளை சரி என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்..,” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.., இது” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
அதே சமயத்தில் அவன் திட்டும்போது நாம் காது கொடுத்துக் கேட்காது சென்றால் “பைத்தியம்” என்று நம்மைச் சொல்வார்கள்.
தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட ரோசம் இல்லை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.
1.ஒருவரைச் சரி இல்லை என்று கேட்டவுடனே
2.அவனை உதைத்தோம்… என்றால்
3.அப்பொழுது “மனிதன்” என்று சொல்வார்கள்.
இந்தத் தியான வழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள். அடுத்தவர்கள்.., ஏதாவது சொன்னாலும் பாருங்கள், இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான் என்று சொல்லிவிட்டு
1.சூடு சுரணை எதுவும் இல்லை,
2.இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.
ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை. தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.
ஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிதல் வேண்டும்.
ஆகவே எம்மைத் தேடி வருபவர்கள் உங்களால் எனக்கு ஏதாவது “நல்லதாக வழி இருக்கின்றதா…” என்று கேட்டால் பரவாயில்லை. அதை விட்டுவிட்டு
1.”சக்கரம்… தகடு…” மாதிரி எதுவும் கொடுப்பீர்களா என்று தான் கேட்கின்றார்கள்.
2.மந்திரம் சொல்வீர்களா? ஜோதிடம் சொல்வீர்களா?
3.நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வீர்களா?
4.எனக்கு எப்பொழுது நல்ல நேரம் வருகின்றது என்று பார்த்துச் சொல்லுங்கள்.
இதைத்தான் கேட்டுப் பழகியிருக்கின்றார்கள்.
ஏனென்றால் இனி வரும் காலங்களில் சிந்திக்க நேரம் இருக்குமா என்று சொல்ல முடியாது.
மெய் ஞானிகள் பெற்ற தீமையை வென்ற அருள் சக்திகளை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றோம். யாம் சொல்லும் அருள் ஞான உபதேசங்களை அலட்சியப்படுத்திவிடாதீர்கள்.
இதைக் கேட்டுணர்ந்தோர் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும் ஆத்ம சுத்தி செய்யுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகருங்கள். சுவாசித்து உங்கள் உடலுக்குள் இணையுங்கள்.
அந்த உயர்வான எண்ணத்தை எடுத்து நீங்கள் விடும் மூச்சலைகள் உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும்.
நீங்கள் பேசும் பேச்சு என்பது “செய்யும் தொழிலே தெய்வம்” போல் என் மூச்சுப் பட்டால் மற்றவர்களின் துன்பங்கள் போய்விட்டது என்ற நிலைக்கு வளர வேண்டும்.
இந்த மாதிரிச் செய்து பழக வேண்டும்.
2. சொத்து சுகத்துடன் வாழ்ந்தவரின் கடைசி நிலை – குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றார்கள்…!
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
என்று குருநாதர் அடிக்கடி பாடுவார்.
உதாரணமாக செல்வம் சொத்து எல்லாம் ஆரம்பத்தில் சம்பாரித்திருப்பார்கள். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் குறைந்து படுக்கையில் இருப்பார்கள்.
அந்த மாதிரி நேரத்தில் வீட்டில் இருக்கும் தன் பையனிடமோ மற்றவர்களிடமோ “தாகமாக இருக்கிறது… கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா…!” என்பார்கள்.
உடனே தண்ணீரைக் கொடுக்காதபடி “உனக்கு வேறு வேலையே இல்லை… போ..!” என்று இவர்கள் திட்டிக் கொண்டு இருப்பார்கள்.
மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அறியும் வண்ணம் குருநாதர் எனக்குப் (ஞானகுரு) பல உபதேசங்களைக் கொடுப்பார்.
அதே சமயத்தில் அதை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்து உண்மையை நான் உணர்வதற்காக வேண்டி என்னைக் கடுமையாகத் திட்டுவார். அப்பொழுது எனக்குச் சோர்வு வரும்.
நான் சோர்வடையும் அந்த மாதிரி நேரங்களில் குருநாதர் என்னை அழைத்துச் சென்று இந்த மாதிரி நோயால் வாடும் ஆள்கள் இருக்கும் குடும்பங்களை நிறையக் காண்பிப்பார்.
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா?
1.ஏனென்றால் அவர் நேற்று நன்றாக இருந்தார்.
2.சந்தோஷமான உலகமாக அவருக்கு இருந்தது.
அதிலே அவர் எடுத்து வளர்த்துக் கொண்ட உணர்வு உடலில் சேர்ந்து நோயானவுடன் “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டாப்பா…!” என்கிறார்.
சும்மா போகும் பொழுதும் வரும் பொழுதும் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருப்பது…! “இது தான் உன் வேலை” என்று பையன் திட்டுகிறான்.
இவர் நன்றாக இருக்கும் பொழுது என்ன செய்கிறார்?
தன் பையனை அவன் சிறு பிள்ளையாக இருக்கப்படும் போது அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக “அங்கே போயிடாதடா… இங்கு போயிடாதடா…!” என்று சொல்லி இருக்கின்றார்.
மீண்டும் மீண்டும் பையன் அந்தக் குறும்புத்தனம் செய்யும் பொழுது சங்கடப்பட்டு இவர் சொல்கிறார். பையனைக் காத்துவிடுகின்றார். ஆனால்…,
1.இவர் வயதான காலத்தில் நோயில் விழுந்து விட்ட பின்னாடி
2.அதே சங்கடம் இங்கே பையனுக்கு வருகின்றது.
3.இவருக்கு வேறு வேலையே இல்லை “எப்போது பார்த்தாலும் “நச்… நச்…” என்று எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார் என்கிறான் பையன்.
தன் பையன் நன்றாக இருப்பதற்காக வேண்டிச் சங்கடப்பட்டுச் சொன்னார். அந்தச் சங்கடமான உணர்வு நோயாக வந்து விட்டது. இவர் நோயில் விழுந்து விட்டார்.
அதே சமயத்தில் நோயானபின் “அப்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாடா…” என்று சொன்னால் பையன் செய்யாதபடி திட்டிக் கொண்டிருக்கின்றான்.
இது நடந்த நிகழ்ச்சி. அப்படியே இந்த உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் குருநாதர்.
இதைப் போன்று மூன்று இலட்சம் பேரைக் (குடும்பங்களைக்) காண்பித்து “மனமே இனியாகிலும் மயங்காதே…!” என்ற பாட்டின் மூலமாக எனக்கு ஒவ்வொரு நிமிடமும் உண்மைகளைத் தெரியும்படிச் செய்தார். அறிய வைத்தார்.
மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…?
நிலை இல்லாத இந்த உலகத்திற்கு “நீ ஏன்டா (என்னிடம்) வாதாடுகிறாய்…?” என்று மெய்ப் பொருளைக் காட்டுவார்.
குருநாதர் கடுமையாகத் திட்டுவார். அதே சமயத்தில் அதற்குண்டான உதாரணத்தைக் காட்டுவார். இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி வேலை செய்கின்றது…? என்று முழுமையான அனுபவமாகக் கொடுப்பார்.
பார்…! செல்வத்தைச் சம்பாதித்து வைத்தார்கள். அவன் நன்றாக இருக்க வேண்டும்… இவன் நன்றாக இருக்க வேண்டும்… தான் நன்றாக இருக்க வேண்டும்…! என்று சொல்லி முயற்சி செய்வார்கள்.
குடும்பத்தின் மேல் உள்ள பாசத்தால் பதறிப் போய் வேலை செய்வார்கள். பிள்ளைகளைத் திட்டவும் செய்வார்கள். சம்பாதித்த காசை பிள்ளைக்குக் கொடுக்கவும் செய்வார்கள்.
கடைசியில்..,
1.இத்தனையும் செய்தேனே “பையன் இப்படிப் போகின்றானே…!”
2.அவன் எதிர் காலம் என்னாகுமோ என்ற வேதனைப்படுவார்கள்
3.அந்த வேதனையும் கோபமும் அதிகமாகிக் கை கால் வராமல் நோயாகிப் படுத்த படுக்கையாகின்றார்கள்.
படுத்துக் கொண்ட நேரத்தில் “முடியவில்லையே… கண்ணு…! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா…” என்றால் “இந்த வருகிறேன் போ…!” என்பான்.
அட… இன்னும் காணோமே… தண்ணீர் தவிக்கின்றதே… கொடுக்கவில்லையே…! என்று சொல்லித் தவிக்கும் ஆள்களைக் குருநாதர் நிறையக் காண்பித்தார்.
நோயாக இருக்கின்றார்கள். அப்போது உடலுக்கு முடியாத நிலைகளில்
1.கூட ஒரு தரம் கொஞ்சம் வேகமாகச் சொல்லி விட்டால்
2.எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டு… செ.., “சனியன் சீக்கிரம் தொலைந்தால் பரவாயில்லை…!” என்று சொல்லாகச் சொல்லிவிடுகிறார்கள்.
மூன்று இலட்சம் பேர் குடும்பங்களில் மூன்று இலட்சம் விதமாக உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? இதெல்லாம் தீய வினையாக சாப வினையாக பாவ வினையாக ஒவ்வொரு உடலிலும் எப்படிச் சேர்கின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா என்று காட்டுகிறார் குருநாதர்.
மனித வாழ்க்கையில் இது வருகின்றது. பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல…, சுகம் பூராம் போகின்றது பார்…! அனுபவிக்க முடிகின்றதா…? என்கிறார் குருநாதர்.
1.சொத்து எல்லாம் அவருக்கு இருக்கின்றது
2.ஆனால் இவருக்குச் சுகமெல்லாம் போய்விட்டதே..!
3.நரக லோகத்தில் அல்லவா இப்பொழுது வசிக்கின்றார்.
4.யாரும் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற நரக லோகத்தில் தான் வாழ முடிகின்றது.
5.சொர்க்கலோகத்திற்குப் போக முடியவில்லை. ஏனென்றால் அவர் எண்ணமே இங்கு இல்லை.
இதைத்தான் அடிக்கடி அடிக்கடி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்திக் காட்டுவார். அந்த அனுபவத்தைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதனைப்பட்டு வேதனைப்பட்டு வேதனையை அனுபவிப்பதற்காக நாம் மனிதச் சரீரம் பெறவில்லை.
வேதனைகளை நீக்கிய… தீமைகளை நீக்கிய… மெய் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து எடுத்து நமக்குள் சிறுகச் சிறுச் சேர்த்து வேதனையிலிருந்து விடுபடும் வாழ்க்கையாக வாழ்ந்து உடலுக்குபின் அழியா ஒளியின் சரீரமாக அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.
1.மெய் ஞானிகள் அடைந்த உன்னத நிலைகளை நாம் பெறுவதே
2.நமக்கு அழியாச் சொத்து.
3.அதுவே பேரானந்தப் பெரு நிலை.
3. பழனியில் “பித்தரைப் போன்று” இருந்த நமது குருநாதர் “ஆண்டவன் என்றால்.., யார்…?” என்று எமக்குத் தெளிவாக உணர்த்தினார்
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.
ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!
பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.
குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ.., என்பார்.
“ஏன் சாமி.., கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்
நீ தான்டா.., கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..,” என்று சொல்கின்றார்கள். நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார்.
என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்?
இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..,?” என்றார்.
நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.
தட்டும் பொழுது நான்.., எதை எண்ணித் தட்டுகின்றேன்?
ஏனென்றால்.., “தட்டும் பொழுது.., சப்தம் வருகின்றது”. ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது?
கல்லில் தட்டினால் ஒரு நாதம் மண்ணிலே தட்டினால் ஒரு நாதம் மரத்தில் தட்டினால் ஒரு நாதம் உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.
ஆக, உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்?
1.இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும்.
2.அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும்.
3.அவர்கள் புனிதம் பெறவேண்டும்.
4.புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.
இப்படி இதை நினைத்து நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.
ஆனால், வழக்கமாக நாம் டெலிபோன் செய்தால் மற்றவர்களிடம் என்ன கேட்கின்றோம்?
உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கின்றார்களா? என்ன..,? ஏது…? என்று கேட்கின்றோம்.
அதனால் என்னை ஆளும் ஆண்டவனுக்கு இதைத் தட்டி அவனுக்குள் இந்த உணர்ச்சியை ஊட்டுகின்றேன் என்கிறார் குருநாதர்.
1.உலக மக்கள் தன்னையறியாமல் எத்தனையோ நிலைகளை செய்கின்றனர்.
2.இந்த உடலாசை கொண்டு அவர்களை இயக்கும் ஆண்டவனை மறந்துவிட்டார்கள்.
3.அவர்களை ஆளக்கூடிய ஆண்டவனை மறந்து வாழ்கின்றனர்.
அவர்களுக்கெல்லாம் “அந்த ஆண்டவனை நினைவுபடுத்துவதற்கு” இதை நான் பாய்ச்சினேன்.
என்னைப் “பித்தன்..,” என்கிறான். ஆனால் அவன் பித்தனாக இருக்கின்றான்.
தன் காரியம் செயல்படுத்தவில்லை என்றால் “எத்தனாகவே.., மாறிவிடுகின்றான்”. பிறருக்குத் தொல்லை கொடுத்து வாழும் எத்தனாக வாழ்கின்றான்.
இவனை எத்தன் என்று மற்றொருவன் சொல்கின்றான். ஆக அவனும் பித்தனாகவே மாறுகின்றான். அடுத்து அவனும் எத்தனாகவே மாறிக் கொண்டிருக்கின்றான்.
அவன் உடலிலே வாழும் “அவன் உடலை உருவாக்கிய.., அந்த உணர்வின் ஈசனை மறந்து விட்டான்”. அந்த ஈசனே இவனை ஆள்கின்றான் என்று அந்த ஆண்டவனை மறந்து மனிதனான பின் மறந்தே வாழ்கின்றார்கள்.
எமக்குள் (ஞானகுரு) இதைத் தெரியப்படுத்துகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
“நீ தான்.., கேட்டாய்… அதனால் உனக்குச் சொல்கின்றேன்”.
“மற்ற எவனும்” கேட்கவில்லை. அவனுக்குச் சொல்லவில்லை. அவனுக்கு டெலிபோன் பண்றேன்.
அவன் உடலில் உள்ள “ஆண்டவன்” அவனை ஆள்கின்றது. அவனுகெல்லாம் “நல்ல சிந்தனை கொடு..,” என்று அவனுக்கு (ஆண்டவனுக்கு) நான் டெலிபோன் செய்கின்றேன்.
இப்பொழுது யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்டால் உங்களுக்குக் கிடைக்கின்றது.
ஆனால் கேட்டுக் கொண்டிருந்தாலும்.., “ஏதோ பைத்தியக்காரன் சொல்கின்றான்.., ஊரை ஏமாற்றுகின்றான்..,” என்று சொன்னால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? அவரவர்கள் ஆசை கொண்டு (அவர்கள்) பைத்தியமாக இருக்கின்றார்கள்.
ஆனால், நான் என்ன செய்கின்றேன்? என்று (குருநாதர்) என்னிடம் கேட்கின்றார். என் உடலில் உள்ள துணியை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டேன். ஏனென்றால், எனக்கு “இந்த ஆடை” பாதுகாப்பாக இல்லை.
அவர்களுக்குள் இருக்கும் எல்லா ஆண்டவனுக்கும் டெலிபோன் செய்கின்றேன்.
1.அந்த உடலை நீ பாதுகாத்துக் கொள்
2.அந்த உடலுக்குள் நல்ல நிலைகளைச் செயல்படுத்து
3.எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும்.
என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் என்ன நடக்கின்றது?
“நான் எண்ணக்கூடியது.., (இந்த ஆடை) இந்த ஆன்மா” எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. “நான் இந்த ஆடையைத்தான்.., விரும்பினேன். ஆனால், என் கிழிந்த ஆடையைப் பார்த்தவுடனே “என்னைப் பைத்தியம்” என்று சொல்கின்றார்கள் என்று தெளிவாக்கினார் குருநாதர்.
இதைக் கேட்டவுடனே எனக்கும் (ஞானகுரு) அந்த அழகான ஆடை “என் உள் மனது என்னை அழகுபடுத்துவதும்.., உயிருடன் ஒன்றி மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது”
உங்கள் ஒவ்வொரு உயிரையும் ஆண்டவனாக மதித்து நான் சொல்லும் பொழுது எனது சொல்லைக் கேட்கும் பொழுது உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் கிடைக்கும். இந்த உணர்வு பெறவேண்டும் என்பவருக்கு அங்கே மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.
அதே சமயத்தில் என் கிழிந்த துணிகளைப் பார்த்து மற்றவர்கள் “என்னைப் பைத்தியம்..,” என்ற நிலைகளை எண்ணும் பொழுது அவர்கள் பைத்தியத்திலிருந்து மீள முடியவில்லை.
ஆக மொத்தம் ஒவ்வொரு மனிதனும் பித்துப் பிடித்துத்தான் அலைகின்றனர். தன் பிள்ளையைச் சீராக வளர்க்க வேண்டும் என்று பித்துப் பிடிக்கின்றான்.
தன் பிள்ளை சரியாக வரவில்லை என்றால் எத்தனாகவே மாறுகின்றான். பிள்ளையை உதைக்க ஆரம்பிக்கின்றான்.
இந்தப் பித்து எத்தனாக மாறுகின்றது. என்ன சொன்னாலும் என் பையன் கேட்க மாட்டேன் என்கிறானே.., என்ற இந்த உணர்வு கொண்டு நாம் தாக்குகின்றோம்.
இதைப் போல தொழிலில் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். அதைச் சரியானபடி நாம் செய்தாலும் நாம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் “எத்தனகாகப் பேசுகின்றோம்.., திட்டுகின்றோம்”.
இப்படிப்பட்ட உணர்வுகளை எடுத்துப் பித்தனாகத்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றானே தவிர என்னைப் பித்தன் என்கின்றனர். இந்த ஆடையும் அலங்காரமும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.
அழகான ஆன்மாவை.., நான் சேர்க்கின்றேன்..,. “பாருடா..,” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
1.அவரை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அவருக்குள் “அகண்ட அண்டத்தின்” உணர்வின் தன்மை
3.”அவருடைய ஆன்மாவில்.., எப்படிக் கலந்துள்ளது” என்று அறிய முடிந்தது.
குருநாதர் எனக்குக் (ஞானகுருவிற்கு) காட்டிய இந்த நிலைகளை எல்லாம் நீங்களும் பார்க்கலாம். “எந்த அளவிற்கு.., ஆர்வமுடன் இருக்கின்றீர்களோ..,” அதைப் பார்க்கலாம்.
அவரின் ஆன்மாவை “என்னில் பார்..,” என்று அவர் சொல்கிற பொழுது அவரின் உணர்வுகள் அந்த மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வருகின்றது.
அவரைப் பார்த்தபின்.., “எனக்கும் ஏகாந்த நிலை.., என்ற மகிழ்ச்சி” வருகின்றது.
என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது? மற்றவர்களுடைய ஆடை எப்படி இருக்கின்றது.
மற்றவர்கள் ஆடை வெளுப்பாக இருக்கின்றது. ஆனால் சொல் எப்படி இருக்கின்றது? வேதனை என்ற உணர்வுடன் தான் வருகின்றது. அந்த வேதனையை நீ நுகர்ந்தால் உன் நிலை என்னாகின்றது? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.
இப்படிப் பித்தர்களாக வாழும் நிலை தான் இன்று இருக்கின்றது. யாரையும் தவறாகச் சொல்லவில்லை. அவன் படும் ஆசை அவனுக்குள் செயல்படுகின்றது. அவரவர் ஆசையே அவருக்குள் மாற்றிக் கொண்டுள்ளது.
இந்த உடலின் இச்சையிலிருந்து நாம் மாற்றி “ஒளியின் உணர்வின்.., ஆன்மாவைச் சேர்த்தால்..,” இன்றைய செயல் நாளைய உடலாக மாறுகின்றது என்று காட்டுகின்றார் குரு.
அவர்களுக்குள் அருள் ஒளி என்ற இந்த உயர்ந்த ஆசையை ஊட்டும் பொழுது அதைப் பெற்றால் அவருக்குள் இருளச் செய்யும் அந்தத் “தீமையான உணர்வுகள் மாறுகின்றது”.
ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று.., “அவன் வீற்றிருக்கும் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்..,” என்று தான் இந்தக் கல்லை வைத்து போஸ்ட் கம்பத்தில் அடிக்கின்றேன்.
உன்னையும் இப்பொழுது “அடித்தேன்டா…,” என்கிறார் குருநாதர்.
உனக்குள் செவிகளில் அந்த நாதம் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு.., “ஏன் சாமி அடிக்கின்றீர்கள்..,?” என்று கேட்டாய்
நீ இதன் மேல் இச்சைப்படுகின்றாய். இந்த இச்சையின் உணர்வு “உனக்குள் செயலாக்கும்” என்று சொன்னார்.
தன் ஆன்மாவைப் பார்க்கச் செய்து பார்த்துக் கொண்ட உணர்வு கொண்டு அகஸ்தியன் அக்காலத்தில் எப்படி வாழ்ந்தான் என்று அவன் வாழ்ந்த காலத்திற்கே என் உணர்வினைக் கொண்டு செல்கின்றார்.
அவன் இன்று துருவ நட்சத்திரமாக வாழ்வதைக் காட்டி அவன் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைவதே “உன் வேலை” என்று தெளிவாக்கினார்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அருள் ஒளி என்ற உணர்வினை வளர்த்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற்றிடுங்கள்.
4. உயிரை அறிந்த நீ… “ஏன்டா பொய் உலகிற்குப் போகிறாய்…? மெய் உலகிற்கு வாடா…!” என்று கூப்பிட்டார் குருநாதர்
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி அவர் கற்றுணர்ந்த… கண்டுணர்ந்த உணர்வுகள் அவர் உடலிலே உருவாக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அத்தகைய நிலை பெற்ற அவர் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும்போது
1.அவர் உணர்வினை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வந்த இருளை அவர் அகற்றியது போன்று
3.நாமும் இருளை அகற்றி மெய் உலகை அடையலாம்.
4.மெய் என்றால் நம் உயிர்.
5.அந்த உலகை அடைய வேண்டும்.
இப்போது நம் உடல் எல்லாம் பொய் உடல்கள். உடலைப் பொய் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இப்போது நாம் மனிதனாக இருக்கிறோம். அடுத்துப் பார்த்தால் சுருங்கிப் போகிறோம்.
சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கிறது…? வேறொரு உடலை நாடுகிறது. ஆகவே பொய் உலகில் வாழுகின்றோம் என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும்.
இதைத்தான் குருநாதர் அடிக்கடி எம்மிடம் (ஞானகுரு) சொல்வார். “டேய்…! ஏன்டா பொய் உலகிற்கு போகிறாய்…? மெய் உலகத்திற்கு வாடா…!” என்பார். ஆகவே நம் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…?
உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான்… உணருகின்றான்… உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்…!
ஆனால் இதை ஆறாவது அறிவால் தெரிந்து கொண்ட பின் நீ எந்த உலகிற்குச் செல்லுகின்றாய் என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் இப்படியெல்லாம் கேட்பார்.
சில சிக்கலான நிலைகள் வரும் போது என்ன செய்வேன்..? என்ன வாழ்க்கை போ…!
என் மனைவியை நோயிலிருந்து எழுப்பி விட்டார். சொல்வதைச் செய்கிறாயா என்று வாக்கை வாங்கிக் கொண்டார்.
ஆனால் காட்டுக்குள் அழைத்துச் சென்று “இப்படித் தொல்லை கொடுக்கிறாரே…!” என்று ரொம்பக் கஷ்டம் வரும் போதெல்லாம் என்னுடைய நினைவு இப்படி வரும்.
எங்கேயாவது பேசாமல் உடலை விட்டுப் போயிடலாம்…! என்று இரண்டு மூன்று முறை தோன்றியது. அந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் “தற்கொலை செய்து கொள்ளலாம்…! என்ற உணர்வு வரும்.
அப்போதெல்லாம் குருநாதர் சிரிப்பார்.
1.இந்த உலகத்தை என்ன என்று நீ அறிந்தாய்…?
2.உன் உயிரை யார் என்றும் அறிந்தாய்…!
3.இந்த உடலையும் அறிந்தாய்…
4.மீண்டும் ஏன்டா பொய் உலகத்திற்கு போகிறாய்…?
வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நான் எண்ணுகின்றாய். நீ யாரை எண்ணி இதைச் செய்து கொண்டாயோ இந்த வேதனையான உணர்வுகள் கேட்பவருக்குள் வலுவாகும். அவர் உடலுக்குள் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.
இந்த உணர்வின் தன்மை இந்த உடலுக்குப் பின் என்ன என்ன ஆவாய்..? பிறிதொன்றைக் கொன்று தின்னும் உணர்வின் தன்மை தான் உடல் பெறும்.
1.இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்.
2.அடுத்து நீ பொய் உலகிற்குத் தானே போகின்றாய்…?
உயிரால் மனித உடல் பெற்று ஆறாவது அறிவால் இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் நிலைகள் கார்த்திகேயா என்ற நிலைக்கு நீ வந்தாய். மீண்டும் ஏன் பொய் உலகிற்குச் செல்கின்றாய்…? என்று இந்த இடத்தில் விளக்கங்களைக் கொடுப்பார் குருநாதர்.
வியாபாரத்தைச் செய்ய வேண்டும் என்று ரொம்ப ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் பொழுது சந்தோஷமாக இருப்போம்.
ஆனால் சந்தோஷமாக இருப்பதில் சிறு குறை வந்து விட்டால் போதும் என்ன வாழ்க்கை இது…? என்று வேதனைகள் படுவோம்.
இந்த உடலை பாதுகாக்க எத்தனையோ வகைகளில் சண்டை இடுவோம். எல்லாம் செய்வோம். ஒரு சொல் தாங்க முடியாமல் “என்ன வாழ்க்கை இது…” என்று தற்கொலை செய்யப் போகிறோம்.
இந்த உடலின் தன்மை நாம் எதை எண்ணுகிறோமோ அதை வளர்த்து விடுகிறது.
1.இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் அதன் வழி நீ செய் என்று தான்
2.உயிர் அந்த உணர்ச்சிகளை இயக்கி நம்மை ஆளுகிறது.
முழுமையான இந்த உடலை நாம் வளர்ச்சியற்ற நிலைகளுக்குக் குறைக்கப்படும் போது குறை உணர்வு சில உயிரினங்களாக நம்மை மாற்றி விடுகிறது என்பதைத் தெளிவாக காட்டுகிறார் குருநாதர்.
மெய் என்றால் உயிர். உயிருடன் ஓன்றிய ஒளியின் தன்மை பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்த மெய்யை நாம் அடைதல் வேண்டும். மெய்யை உணர்த்தும் உணர்வுகளைப் பெறும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதனை இவ்வாறு உணர்த்துவார்.
1.கடவுளின் அவதாரம் பத்து “கல்கி…!”
2.உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் ஒளியாக மாற வேண்டும்.
5. உடலை விட்டுப் பிரிந்தால் பிறவியில்லா நிலை அடைந்து விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற மெய்யை உணர்த்தினாலும் “ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள்… இல்லை…!” என்று வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்
நம் உடலான சிவனுக்குள் எதனையும் வலுவாக்கும் அந்த உணர்வுகள் வலுப்பெற்றாலும்
1.எதனின் உணர்வு அதிகமோ
2.அதனின் உணர்வு கொண்டு நமக்குள் விளைந்து
3.நம் அடுத்த சரீரத்தை இது நிர்ணயிக்கின்றது.
இதை உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயங்களில் நாம் சுவாசிக்கும் நிலையைக் காட்ட (அந்தக் கணக்குகளைக் காட்ட) நந்தீஸ்வரனைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
ஐந்து புலனறிவு கொண்ட அந்த மிருகங்கள் தன் உணவை உட்கொள்ளும் பொழுது அது விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்ளும். நல்லதை மலமாக மாற்றிவிடும்.
இதைப் போல்
1.ஒரு விஷம் கொண்ட வேதனை கொண்ட
2.ஒரு மனிதனின் உணர்வுகளை நாம் நுகர்வோம் என்றால்
3.இது நம் உடலுக்குள் சென்று அதனின் தன்மை உருவாகி
4.நம் உடலின் தன்மையை விஷம் கொண்டதாக மாற்றிவிடும்.
இதனின் கணக்கின் தன்மை அதிகரித்துவிட்டால் அடுத்து மிருக நிலைகளில் அல்லது விஷத் தன்மை கொண்ட அணுக்களின் தன்மையில் எதை அதிகரிக்கின்றோமோ அதனின் அணுவாக உருவாகிவிடும்.
விஷத் தன்மை உருவாகிவிட்டால் அதன் வழிகளில் நம் அடுத்த சரீரத்தை இந்தக் கணக்கின் பிரகாரம் உருவாக்கும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.
1.இதை நாம் அறிவதில்லை.
2.இதை உணர்த்துவாரும் இல்லை.
3.உணரச் செய்யும் மனிதர்கள் இல்லை.
4.இதை உணர்த்தினாலும் இன்று ஏற்றுக் கொள்ளும் மனிதனும் இல்லை என்று
5.வேதனைப்பட்டுச் சொன்னார் குருநாதர்.
நீ இதனின் நிலைகள் கூறப் போகின்றாய்.
சாங்கியங்களும் சாஸ்திரங்களும் சொல்லிச் சிவனுக்கு அபிஷேகம் என்றும் ஆராதனைகள் என்றும் இவ்வாறெல்லாம் அபிஷேகித்துவிட்டால் அந்தச் சிவன் எனக்கு ஓடி ஓடிச் செய்வான் என்று செயல்படுத்துகின்றனர்.
இத்தகைய உணர்வைத் தனக்குள் பதிவாக்கிய பின் அதே அணு அதன் உணர்வின் எண்ணங்களைத்தான் அவர்களுக்குள் உருவாக்கும்.
அதன் வழிப்படி மந்திரங்களையும் இந்த உணர்வின் தன்மையும் அதற்காக அபிஷேக உணர்வுகளைக் கொடுத்து இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்துவிட்டால் “நந்தீஸ்வரா…” தன் எண்ணத்தின் தன்மை உருவாக்கி உணர்வின் அணுவாக உடலுக்குள் உருவாகிவிடும்.
இதையே மீண்டும்… “இந்த மந்திர ஒலியையே” மீண்டும் மீண்டும் எழுப்புவான் என்றால் இதன் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலின் ஈர்ப்புக்குள் சென்றுவிடுகின்றது.
பிறவியில்லா நிலை அடைவதில்லை.
ஆகவே அந்தச் சிவ ஆலயத்தில் எதை எண்ண வேண்டும் எதைப் பெறவேண்டும் என்று மக்களுக்குத் தெளிவவாக நீ எடுத்துச் சொல் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
6. நல்லது நமக்குள் வராது தடைப்படுத்துவது எது? எதனால்?
காட்டுப் பகுதியில் தாவர இனங்கள் அதனதன் உணர்வு கொண்டு கூட்டமைப்பாக இருக்கின்றது. அதிலே தன் இன மரங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் அதனுடைய அலைவரிசை அதிகமாகின்றது.
அதிலே சிறு சிறு செடிகளாகவோ அல்லது அந்த மாற்று மரங்களின் தன்மை குறைவாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது, அதிகமாக அடர்த்தியாக இருக்கும் மரங்கள் அது தனது உணர்வால் கவரப்படும் பொழுது அதன் அருகிலே இருக்கக்கூடிய அடர்த்தி குறைவான (மாற்று) மரங்களுக்கு அதன் உணர்வைக் கவரும் திறன் இழக்கப்படுகின்றது.
ஏனென்றால், அடர்த்தியின் தன்மை வரப்படும் பொழுது அந்த மரங்களுக்கு வரும் சத்தினை இது தடைப்படுத்தி இது மறைத்துவிடுகின்றது.
ஆகவே, அப்பொழுது அந்த மரம் மிகவும் சிரமப்பட்டுத்தான் வளர்ச்சி பெறுகின்றது.
இதைப் போன்ற நிலைகளைக் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு மரங்கள் குறைவதும் அதனின் உணர்வின் வேகங்கள் எவ்வாறு வருகின்றது? என்று அதை உணரும்படிச் செய்தார்.
இப்பொழுது நமக்கு நோய் என்று வந்து விட்டால் நமக்கு வேதனை வருகின்றது. வேதனைப்படும் பொழுது அந்த நேரத்தில் நல்லதை யாராவது சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மறுப்போம்.
வேதனைப்பட்டுள்ளோர்களுக்கு வேதனைப்படும் நிலைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தால் ரசித்துக் கேட்பார்கள். அப்பொழுது அந்த நேரத்தில் அவர்களுடைய வேதனைகள் தெரியாது.
அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது “இது நல்லது.., அது அப்படி இருந்தது..,” என்று உயர்ந்த குணங்களைப் பற்றி நீங்கள் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாகி அதனுடைய நிலைகளை நாம் கேட்க மறுப்போம்.
ஏனென்றால் அந்த வேதனை உணர்வு நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணர்வுகளை நுகராதவண்ணம் தடைப்படுத்தி நமக்குள் தீமைகளையே விளைய வைக்கும்.
நமக்குள் தீமையை விளைவிக்கும் இத்தகையை நிலைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.
அதற்குத்தான் செடிகளுக்கு உரம் போடுவது போன்று அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளுக்குள் வலு ஏற்றும்படிச் செய்கின்றோம்.
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் இணையச் செய்தால், நல்ல உணர்வுகள் இயங்கவிடாமல் செய்யும் தீய உணர்வுகளை அருள் மகரிஷிகளின் உணர்வுகள் செயலிழக்கச் செய்துவிடும்.
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நம் ஆன்மாவில் பெருக்கச் செய்தால் அதனின் அடர்த்தி அதிமாகி தீமை செய்யும் உணர்வின் அலைகள் நம் அருகே வராதபடி நம்மைப் பாதுகாக்கும்.
நலம் பெறுக வளம் பெறுக, மகரிஷிகளின் அருள் சக்தி பெறுக.
7. “வெளியிலிருந்துதான் நமக்குள் தீமை வருகின்றது” அதைத் தடுத்துப் பழகும் ஆற்றலை நாம் செயலாக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்
நான் உலக அனுபவம் பெறுவதற்காக குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்தார்.
பல தொல்லைகளான இடங்களுக்குப் போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது பயம் வருகின்றது.
அப்பொழுது குருநாதர் அதை உன்னால் அடக்க முடியவில்லை என்றால் “அது தானே உன்னை இயக்குகின்றது.., அது தானே உன்னை ஆட்சி புரிகின்றது.., நீ அல்லவா அதை அடக்க வேண்டும்…,” என்பார்.
அது உள்ளே சென்று உன்னை இயக்குகின்றது. உன்னை வேதனைப்படச் செய்வது யார்?
1.”வெளியில் இருந்து தான்” உன் உடலுக்குள் போகின்றது.
2.அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
3.நான் தீமையைத் தடுக்கும் ஆயுதம் கொடுத்திருக்கின்றேன்.
4.நீ ஏன் அதைப் பயன்படுத்தித் தடுக்கவில்லை?
5.தடுக்கவில்லை என்றால் அது அந்த வேலையைச் செய்யும் என்று என்னைத் தெளிவாக்கினார்.
சில பேர் தியானம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு அந்தத் தியானம் ஒன்றைத்தான் சொல்கின்றார்களே தீமையைத் தடுத்துப் பழகும் ஆற்றலைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று உணரவில்லை.
1.என்னை இப்படிப் பேசுகின்றான்.., நான் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பது…?
2.கடன் கொடுத்தவன் பணம் திரும்பத் தர மறுக்கின்றான்.., நான் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?
என்று இப்படி மாற்றிக் கொள்கின்றார்கள்.
ஆக, நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. கண்கள் அந்த வழியைக் காட்டுகின்றது.
குருநாதர் எமக்கு உபதேசித்தது ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாகவும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட வேண்டும் என்றார்.
அப்பொழுது “அவர்களிடமிருந்து பகைமை மறைந்து.., அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.
அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பொழுது “என் உடலான.., இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றேன்”.
“நீங்கள் நன்றாக ஆக வேண்டும்” என்று நான் எண்ணினால் எனக்குள் நல்ல நிலை ஆகின்றது.
இப்பொழுது யார் நமக்குத் தீமைகள் செய்தார்களோ அவருக்கும் “நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரவேண்டும்” என்று சொன்னால் அந்தத் “தீமையின் உணர்வுகள்” நமக்குள் வருவதில்லை.
அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று சொன்னால் அவரைப் பற்றிய “வெறுப்பான உணர்வுகள்” நம் உடலுக்குள் வருவதில்லை.
அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டுமே தவிர அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர் கெட்டதைத்தான் நல்லதாக்கும். அவர் செய்யும் தவறுக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.
1.அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும்.
2.எல்லோரிடமும் பண்பும் பரிவும் காட்டும் எண்ணங்கள் வரவேண்டும்
3.அந்த அருள் ஞானம் அங்கே வர வேண்டும் என்று சொன்னால்
இந்த உணர்வுகள் அவர்களைத் தவறு செய்ய விடுவதில்லை. அப்பொழுது இதை நாம் வெறுமனே சொல்ல முடியாது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கலந்து நம் எண்ணங்களுக்கு “முதலில்” வலிமை கொடுக்க வேண்டும்.
இப்படி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் “எத்தகையை சங்கடங்கள் வந்தாலும்” மாற்றி அமைக்கலாம்.
ஒரு விபத்தையோ மற்ற அதிர்ச்சி தரக்கூடிய நிலைகளை உற்றுப் பார்த்தால் உடனடியாக ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விபத்தில் உடலை விட்டு ஆன்மா பிரிந்திருந்தால் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அடிபட்டிருந்தால் அவர்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் பூரண குணம் அடைந்து சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும்.
அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் நினைக்க வேண்டும்.
உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் போகின்றோம். ஆனால், தீமைகளை நமக்குள் புகாது தடுக்கும் நிலையை எண்ணாதபடி நாம் செய்தோம் என்றால் அங்கே நடந்த விபத்தின் வேதனைகள் நமக்குள் வந்து நடுங்கச் செய்துவிடும்.
அதைப் பார்த்ததும்.., உடனே “கிடு.., கிடு.., என்று உடல் நடுக்கமாகிவிடும். நம்முடைய அடுத்த நல்ல செயல்கள் அனைத்துமே தடையாகி “இரண்யன்” ஆகிவிடும்.
அதவாது நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும். அதனால் தான் இரண்யன் என்று பெயர் வைக்கின்றார்கள்.
இந்த மனித வாழ்க்கையில் மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையாகக் காவியங்களாக படைத்துள்ளார்கள் ஞானிகள். ஏனென்றால் இயற்கையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் காட்டினார்கள்.
அந்த மெய்ஞானிகள் உணர்த்தியதைத்தான் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றோம்.
8. அன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து… நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…!” என்று உணர்த்தினார் குருநாதர்
ஊருக்குள் நான் (ஞானகுரு) கெளரவமாக இருக்கப்படும் போது வேலைக்குச் செல்லும் போது திடீரென்று குருநாதர் அழைக்கின்றார், சாக்கடைப் பக்கம் அவர் அமர்ந்து இருக்கின்றார் குருநாதர்.
ஒரு காபி ஒரு டீ வாங்கி வா என்றார். கடையிலிருந்து வட்ட செட்டாவில் வாங்கி வந்தேன்.
அப்போது சாக்கடைப் பக்கம் நான் போனவுடன் இங்கு வா என்றார். இங்கே உட்கார் என்றார். அங்கு சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்ட அந்தக் கப்பிகள் அனைத்தையும் இந்தக் காபியிலும் இந்த டீ யிலும் போடுகிறார்.
போட்டு விட்டு இதை நீ சாப்பிடு என்கிறார் குருநாதர்.
ரோட்டுப் பக்கம் ஜனங்கள் அதிகமாக போகும் இடம் அது. இந்தச் சாக்கடைப் பக்கம் இருந்த உடனே இந்த காப்பியில் அள்ளிப் போட்ட உடனே எல்லோரும் என்னை “வேடிக்கை…” பார்க்கிறார்கள்.
இவ்வாறு அனைவரும் வேடிக்கை பார்க்கும் போது நம்மைப் பார்த்த உடனே என்ன ஆனது?
ஏற்கனவே குருவிடம் நீங்கள் சொல்வது அனைத்தையும் கேட்கிறேன் என்று சொல்லி விட்டேன். அதனால் இவரிடம் இருந்து மீற முடியவில்லை.
பல உண்மைகளை எல்லாம் குரு காட்டி இருக்கிறார். இதை மறுத்தாலோ நமக்கு இனி “என்ன தண்டனை கிடைக்குமோ…!” என்ற நிலையும் வருகிறது. அவருடைய வாக்கினாலே எப்படித் தப்ப முடியும் என்ற நிலையும் வருகின்றது.
அவர் கூப்பிட்ட உடனே போகமல் இருக்க முடியவில்லை.
அந்த சாக்கடைப் பக்கத்திலே உட்கார்ந்து அதை அள்ளிப் போட்டு “நீ குடி…” என்கிறார்.
நானோ ரோட்டைப் பார்க்கிறேன் ஆள்களைப் பார்க்கிறேன் வேடிக்கை பார்க்கிறவர்களைப் பார்க்கிறேன். குருநாதரைப் பார்க்கிறேன் என் மனதைப் பார்க்கிறேன். “வசமாகச் சிக்கி விட்டோமே” என்று எண்ணுகின்றேன்.
இனி யாரும் பார்த்தால்… “நம்மைக் கேலி செய்வார்களே…” இதை எப்படிக் குடிப்பது…! உமட்டல்… அதை நினைத்தாலே “வாந்தி” வருகிறது.
இந்த பக்கம் அசிங்கமாக இருக்கிறது, அசூசையாகக் கிடப்பதை அதிலிருந்து வருவதைச் “சாப்பிடு” என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்பொழுது எனக்கு உமட்டல் தான் வருகிறது.
இதைப் பார்த்தவுடனே குருநாதர் கேட்கின்றார்.
நான் சொல்வதைச் செய்றேன் என்று சொன்னாய். உன்னைக் காபி தானே குடிக்கச் சொன்னேன். இதற்குள் எவ்வளவு பெரிய சத்து இருக்கிறது தெரியுமா…! நீ குடித்துப் பார்… என்கிறார்.
அவ்வாறு அவர் கூறினாலும் எனக்கு வாந்தி தான் வருகிறதே தவிர உள்ளுக்குள் போக வழி இல்லை.
அப்புறம் அதை எண்ணி இது பண்ணியவுடனே.., “சரி நீ போ, இந்த வட்ட செட்டைக் கொண்டு கடையில் கொடுத்து விடு” என்கிறார்.
அங்கே போனால் டீ கடைக்காரர் சும்மாவா விடுவார். வட்ட செட்டாவை நீயே வைத்து உங்கள் வீட்டில் வைத்துக் குடித்துக் கொள். யாராவது பார்த்தால் இங்கே வர மாட்டார்கள். இங்கு காபி குடிப்பதைக் கெடுக்காதே என்றார்.
பைத்தியதோடு சேர்த்து நீ ஓரு பைத்தியமாக இருக்கிறாய், நீ போயா…, என்கிறார். குருநாதரை ஒரு பைத்தியமாகவும் அவருடன் நான் சேர்ந்து கொண்டதால் என்னையும் பைத்தியாமாக்கி “நீ போய்யா..,” என்கிறார்.
வரும் போது முறுக்கு பொட்டுக் கடலை நிலக்கடலை இந்த மூன்றையும் வாங்கிட்டு வாடா என்றார்.
வாங்கிக் கொண்டு வந்தவுடன் சாக்கடையில் இரண்டு அடிக்கு ஒரு கோடு போடச் சொல்கிறார்.
இரண்டு அடிக்கு வரிசையாக கோடு போட்டேன். அடுத்து எதைச் சொல்வாரோ… என்ன சொல்வாரோ…! என்று தவித்துக் கொண்டு இருக்கிறேன்.
முருக்கு நிலக்கடலை பொட்டுக்கடலை வாங்கிட்டு வந்ததை சாக்கடைக்குள் போடச்சொல்லிவிட்டார்.
முதலில் பொட்டுக்கடலை ரெண்டாவது நிலக்கடலை மூன்றாவது பொட்டுக்கடலை நான்காவதாக முறுக்கு அதற்கப்புறம் பொட்டுக்கடலை அதற்கு அப்புறம் இந்த நிலக்கடலை,
இப்பொழுது “நீ முகர்ந்து பாருடா…!” என்கிறார்.
இதென்ன வம்பாகப் போய்விட்டது? இதை எடுத்துச் சாப்பிட சொல்வார் போலிருக்கிறது…!
நான் குருநாதரிடம் நாற்றம் தான் வருகிறது சாமி…! என்றேன்.
அப்படியாடா வருகிறது…! நான் சொல்வதைச் செய்கிறேன் என்று சொன்னாய். என்னை காப்பாற்றுவேன் என்று சொன்னாய் என்கிறார் குருநாதர். இப்பொழுது நாற்றம் வருகிறது என்கிறாய்…!
“ஆரம்பத்தில்” என் மனைவியைக் குருநாதர் காப்பாற்றிய பொழுது நான் சொல்வதை நம்புகிறாயா? என்றார். நம்புகிறேன்… என்றேன்.
என்னை நீ காப்பாற்றுவாய் அல்லவா? நீங்கள் சொல்வதை எல்லாம் நான் காப்பாற்றுவேன். சொன்ன வாக்கை “நான் காப்பாற்றுவேன்” என்று சொன்னேன்.
சொன்ன வாக்கைக் காப்பாற்றுவேன் என்று சொன்னாய் அல்லவா இப்பொழுது ஏன் இந்த மாதிரிச் செய்கிறாய்? நீ முகர்ந்து எடப்பா என்கிறார்.
எதை…!
கோடு போட்டு மொத்தமாகக் கலக்கிவிட்டு நீ நிலக்கடலைப் பருப்பாக எடு என்கிறார். எல்லாவற்றையும் வேறொரு பக்கம் போடுகிறார்.
அந்த நேரத்தில் தான் பன்றி வருகிறது. அது வந்தவுடன் பாருடா…, என்கிறார்.
அங்கிருந்து நுகர்ந்து முகர்ந்து முகர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறது. அந்த வாசனையைப் பிடித்தவுடன் குடு…குடு… என்று ஓடி இங்கே வருகின்றது.
வந்த உடனே முதலில் நிலக்கடலைப் பருப்பை எடுத்தது. அதைச் சாப்பிட்டவுடன் முருக்கைப் போய் எடுத்தது. அதைத் தாண்டி நிலக்கடலைப் பருப்பை எடுத்தது. அதற்கு அப்புறம் முகர்ந்து பார்த்து விட்டுக் கடைசியாகத்தான் பொட்டுக் கடலையை எடுக்கிறது.
இதிலே எண்ணெய்ச் சத்து இருக்கிறது அதிலே எண்ணெய்ச் சத்து இல்லை.
பார்த்தாயா…! அது எப்படி நுகர்ந்து எடுக்கின்றது? பார்த்துக் கொண்டாயல்லவா…! நீயும் எடு… என்கிறார்.
நான் எங்கே சாமி எடுக்க முடியும்…! நாற்றம் தான் அடிக்கிறது என்றேன்.
பார்த்துக் கொண்டாய் அல்லவா.
1.நாற்றத்தை அது பிளந்தது.
2.அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்தது,
3.அது கெட்டதை எண்ணவில்லை.
நீயோ நாற்றம் என்று எண்ணியதால் “அது தான்” உனக்கு முன்னாடி வருகிறது, உன்னால் “நல்லதை நுகர முடியவில்லை…” என்று சொல்கிறார்.
1.அப்புறம் எதோ ஒன்றைச் சொல்கிறார்.
2.அதை நுகர்ந்தேன்.
3.நுகர்ந்து எடுத்தவுடனே அப்பொழுது அதற்குள் இருக்கூடிய அந்த வாசனையை இது எப்படி பிளக்கிறது?
4.இந்த உணர்வை நீ இப்படிச் சுவாசி.
5.இதற்கு அப்புறம் நீ நுகர்ந்து பார்க்கக் கூடிய நாற்றம் எப்படி விலகுகிறது.
6.இந்தப் பருப்பை நீ நுகர முடிகிறது.
இப்படிச் சொன்னவுடனே மறுபடியும் இதை எடுத்து சாப்பிடச் சொல்வாரோ என்று அந்தப் பயமும் வருகிறது.
இப்படி இந்த உணர்வின் தன்மை என்ன இருந்தாலும் நாம் சாக்கடைக்குள் போட்டதைச் சாப்பிடச் சொல்லி விட்டால் என்ன? என்கிற போது வாந்தி தான் வருகிறது, இதைத்தான் சாப்பிடச் சொல்வாரோ என்கிற இந்த நிலை தான் வருகிறது.
நடந்த நிகழ்ச்சி இது. பின் குருநாதர் உபதேசித்தார்.
இந்த உயிர் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கெடுதலில் இருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து அந்த உடலில் சேர்த்து கொண்ட உணர்வு வலுப்பெற்று அதனின் வலு கொண்ட அந்த உணர்வின் சரீரமாக வளர்ந்தது.
கெட்டதை நீக்கி நல்லதைப் பெறும் இந்த உணர்வின் தன்மையை அது வளர்த்து அதிலே சேர்த்து கொண்ட அந்த வினைக்கு நாயகனாக இன்று மனித உடல் நீ பெற்றிருக்கிறாய்.
1.அன்று இது நாற்றம் என்று நீ விலகி இருந்தால்
2.உன் உடல் இன்று நாற்றத்தை விலக்கும் சக்தியாக வராது.
3.உன் உடலில் இருந்து வரக்கூடிய இந்த உணர்வின் தன்மை
4.”கெட்டதைப் பிரித்து நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…” என்று
5.வியாசகர் உணர்த்திய “வராக அவதாரத்தை” அங்கே அமரச் செய்து எமக்குத் தெளிவாக்கினார்.
கெட்டதை நீக்கிப் பல நிலைகள் கொண்டு இப்படி வந்திருக்கூடியது தான் இந்த மனித உடல் என்று அங்கே சாக்கடையில் வைத்து உபதேசத்தைக் கொடுக்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
அந்த வராகன் நாற்றத்தை எண்ணாது நல்லதை நுகர்ந்தது போல் இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை நுகராது இந்தக் காற்றில் மறைந்துள்ள அருள் மகரிஷிகளின் அருளை நுகர்தல் வேண்டும் என்று எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார்.
வராகன் என்றால் தீமைகளைப் பிளந்து நல்லதைப் பிரிக்கும் “மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல்” என்று பொருள்.
9. ஞானத்தைப் போதிக்கும் குருவிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்?
வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்ன நிலைகள் இது.
பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.
என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர். ஆனால், என்னிடம் எதை நாடி வந்தார்கள்?
எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும். உடல் நலம் வேண்டும். இதைத்தான் கேட்டார்கள். அதே சமயத்தில் வருவோரெல்லாம் எனக்கு “அந்த அருள் வேண்டும்.., இந்த அருள் வேண்டும்..,” என்று தான் கேட்டார்கள்.
மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.
பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெறவேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்.., யாரும் இல்லை”.
அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள். “தனக்காகத்தான்.., கேட்டார்களே தவிர.., எல்லோரும் நலம் பெறவேண்டும்..,” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.
ஆனால், அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.
இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.
ஆனால், நீ எதை எண்ணப் போகின்றாய்? நீ எதைப் போகின்றாய்? என்று பல வினாக்களை எழுப்பினார். நீ பெறவேண்டிய தகுதிகள் எது? அதைப் பெறுவது எப்படி?
இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.
இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்..?” என்றும் சொன்னார்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெறவேண்டும். அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.
இவ்வாறு அந்த அருள் வழி குரு பெறவேண்டும் என்று நீ எண்ணினால் அந்தக் குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார். ஆகவே, நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய் என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
வைகுண்ட ஏகாதசி அன்று குருநாதர் உடலை விட்டுப் பிரியும் முன் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி எனக்கு உணர்த்திக் காட்டினார்.
அவர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளையும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறும் தகுதியைப் பெற்றுக் கொள் என்றார்.
அந்த ஆற்றலின் துணை கொண்டு அதன் வழியில் குருவை நீ எவ்வாறு விண் செலுத்த வேண்டும்? எதை நீ குருவாக்க வேண்டும்? என்ற பேருண்மைகளை எல்லாம் உணர்த்திவிட்டுத்தான் வைகுண்ட ஏகாதசி என்று அந்த உடலை விட்டு அவர் ஆன்மா பிரிந்தது.
குருவின் நினைவு கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் நான் கொண்டு வரப்படும் பொழுது அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழிகளிலே சென்று ஒளியின் சரீரம் பெற்றுப் பேரானந்த பெருநிலையாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்.
ஏனென்றால், அதன் வரிசையில் ஒன்றை வைத்துத்தான் ஒருவர் செல்ல முடியும்.
இந்த வழியினை நீ பெறு. இதைப் போல எல்லோரையும் பெறச் செய்வதற்கு வழி காட்டும் பொழுது இந்த நிலை பெறுகின்றாய். அவர்கள் பெறவேண்டும் என்று நீ ஏங்கு. அந்தத் தகுதியை அவர்களைப் பெறச் செய்.
அதன் வழிகளில் அடுத்தவர்களும் இதைப் போல எண்ணும் பொழுது நீயும் எளிதில் அங்கு செல்கின்றாய். மற்றவர்களும் அந்த நிலை பெறுகின்றார்கள்.
இதை நீ வழிப்படுத்து என்றார் நமது குருநாதர்.
உங்களுக்குச் சொல்வது அர்த்தமாகின்றதா..? நீங்கள் இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
10. குருநாதர் தன் கை கால்களில் கிழிந்த துணிகளைக் கட்டுவார் அது போல் செடி கொடி மரங்களிலும் துணிகளைக் கட்டுவார் – அதனுடைய சூட்சமும் மெய் ஞானத்தை உணர்த்தும் அவருடைய பரிபாஷையும்
நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எதையெல்லாம் கேட்கின்றோமோ எதையெல்லாம் நினைக்கின்றோமோ இவை அனைத்தையும் நாம் நுகர (சுவாசிக்க) நேருகின்றது.
நுகர்ந்த உணர்வுகள் அனைத்தையும் “ஓ...” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்...” என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர்.
இப்போது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளை எண்ணி அதைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வுகளை உயிர் “ஓ...ம் நமச்சிவாய...” என்று உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர்.
அகஸ்தியன் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அரும்பெரும் சக்திகள் அவை அனைத்தும் இன்று பூமியில் கலந்துள்ளது.
அவைகளை நாம் எண்ணத்தால் எண்ணி அதைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்தோம் என்றால் அதை “ஓ...ம் நமச்சிவாய...” என்று நம் உடலாக மாற்றிக்கொண்டே இருக்கும் நமது உயிர்.
உதாரணமாக விஞ்ஞானிகள் நிரூபிக்கின்றனர். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரணுக்கள் அவைகளின் உணர்வுகள் இன்றும் பூமியில் படர்ந்துள்ளதைக் கம்ப்யூட்டர் மூலம் காண்கின்றனர்.
அது வாழ்ந்த இடங்களில் மடிந்து புதைந்து கிடக்கும் அவைகளைக் கம்ப்யூட்டர் மூலம் அறிகின்றனர்.
அந்த மணங்கள் பூமியில் மடிந்திருந்தாலும் நுண்ணிய அதிர்வுகளைக் கவரும் கம்ப்யூட்டர்களை வைத்து அந்த உணர்வினைப் பதிவாக்கிக் கொள்கின்றனர்.
அதைப் பல மடங்கு பெருக்கி
1.இங்கே எவை வாழ்ந்தது? எத்தகைய ரூபம் கொண்டது? என்று
2.ஒலியின் அதிர்வை வைத்துப்
3.பூமியில் மடிந்திருக்கும் படிந்திருக்கும் அந்த உடல்களின் எலும்புக் கூடுகளைக் காண்கின்றனர்.
அந்த எலும்புக்கூட்டுகளில் அமைந்துள்ள உணர்வலைகளைக் கம்ப்யூட்டர் மூலம் அதிர்வுகளைக் கண்டுபிடித்து
1.அதிர்வுகளை ஆயிரம் மடங்கு பெருக்கி
2.அதன் வழி கொண்டு அன்றைய காலம் வாழ்ந்த மிருகங்களின் உருவங்களை அமைக்கின்றனர்.
இன்றும் பார்க்கின்றோம். ஒரு திருடனை முந்தியெல்லாம் கைரேகை மூலம் கண்டுபிடிப்பார்கள்.
இப்போது கைரேகை பதிந்தால் அந்த ரேகையின் வழி கொண்டு அந்த மனிதன் எவ்வழியில் ரூபம் கொண்டிருந்தான் என்ற நிலையைக் கம்ப்யூட்டர் மூலம்
1.அந்த ரேகையின் உணர்வின் அதிர்வலைகளை வைத்து
2.அவன் ரூபத்தையே படமாக்குகின்றனர்.
3.அதன் வழியில் இன்று திருடனைக் கண்டுபிடிக்கின்றனர்.
இதை நிரூபிக்கின்றது விஞ்ஞானம்.
இதைப்போல அகண்ட அண்டத்தையும் இந்த பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது என்ற உண்மையினை உணர்ந்தவன் முதன் முதல் மனிதன் அகஸ்தியன்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் பூமியில் படர்ந்துள்ளது. அகஸ்தியன் கண்டுணர்ந்த (மறைந்த) அந்தப் பேருண்மையின் உணர்வுகளை அறியும்படிச் செய்தார் குரு.
பல காலம் 20 வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார் குருநாதர். அவர் உபதேசித்து உணர்த்திய உணர்வுகளை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவு கொண்டு
1.அகஸ்தியர் உணர்வுகள் எங்கெங்கெல்லாம் எவ்வழியில் இருந்தது?
2.அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் சென்றான்?
3.அவன் நடந்து சென்ற பாதைகளில் உணர்வுகள் எவ்வாறு படர்ந்துள்ளது? என்று பார்க்கும் படிச் செய்தார்.
உதாரணமாக அவர் உடலோடு இருக்கும் போது பித்தனாக இருப்பினும்
1.கைகளில் அடிக்கடி ஒரு கிழிந்த துணியைக் கட்டுவார்.
2.காலில் ஒரு துணியைக் கட்டுவார்.
3.வித விதமான துணிகளைக் கட்டுவார்.
பார்ப்போருக்கு அவர் பைத்தியம் போலவும் இருப்பினும்
1.அவர் செடி கொடிகளில் துணிகளைக் கட்டுவார்.
2.என்னென்னமோ புரியாத பாஷையில் சொல்வார்.
நான் அதைக் கேட்பேன்... அர்த்தமாகாது....! ஏதோ செய்கின்றார்...! என்று தான் இருக்கும்.
ஆனால் கடைசி நிலையில் அவர் சரீரத்திற்குப்பின் அவர் எதையெதையெல்லாம் எப்பாஷையில் பேசினாலும் அதை எமக்குள் பதிவாக்கி நினைவாக்கும் முறையை உருவாக்கினார்.
அவரை நினைக்கும் போதெல்லாம்
1.குரு சென்ற பாதையில் அவர் எங்கெங்கெல்லாம் சென்றார்?
2.அகஸ்தியரின் நிலைகளை எப்படியெல்லாம் அறிந்தார்?
அவர் அறிந்த உணர்வுகளில் அக்காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த நிலையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளை அறிய முடிந்தது.
அகஸ்தியன் துருவனான நிலையும் துருவ மகரிஷியான நிலையும் துருவ மகரிஷி ஆனபின் துருவ நட்சத்திரமான இந்த வழிமுறைகளை அவர் எமக்குள் உபதேசித்த இந்த உணர்வின் வழி கொண்டு கண்டுணர முடிந்தது.
நான் பல காடுகளுக்குச் செல்லப்படும்போது இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பித்த நிலையில் அங்கே... “அந்தச் செடிகளில்... மரங்களில்... தெரியும்.”
அப்போது அந்த நினைவுகள் வரும்.
அந்த நேரம் அந்தச் செடியின் அருகிலே போய் நின்றோம் என்றால்
1.அந்தத் தழை அப்படியே வந்து என் மீது ஒட்ட வரும்.
2.அப்போது அவர் சொன்ன நினைவுகள் வரும்.
ஏனென்றால் இந்தச் செடிகளில் அந்தத் துணிகளைக் காட்டும் போது நாம் போகும் போது அந்த துணிகள் தெரிந்தால் அது எச்சரிக்கையாக இருக்கும்.
இப்போது புலியோ நாகனோ மற்ற காட்டு விலங்குகள் உயிரினங்கள் மடிந்தால் அதன் உடலில் உள்ள சத்துக்கள் பூமியில் படர்கின்றது.
அந்த உடல்களிலே புழுக்களாக உருவாகின்றது, அந்த உயிர் போய் விட்டால் அந்தப் புழுக்கள் மீண்டும் வெளி வந்த பின் தாவர இனங்களிலே அது பட்டு மீண்டும் அந்தத் தாவர இனங்களிலே புழு பூச்சிகளாக அது வளர்கின்றது.
அதன் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிவிடுகின்றது. இந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளிலிருந்து கவர்ந்து கொண்ட சக்திகள் அது நகர்ந்து ஓடும்.
செடி கொடிகளிலிருந்து வெளிப்பட்ட சத்தின் அலைகள் நகர்ந்து ஓடும்போது அதைக் காட்டிலும் ஒரு விஷச் செடியில் இருந்து வரும் அந்த உணர்வலைகளுக்குள் சிக்கியபின் “கிறு...கிறு...” என்று சுற்றுகின்றது.
சுற்றும்போது அந்த உயிரணுக்கள் தாவர இனங்களை உணவாக உட்கொண்ட விஷத்தன்மையான அலைகளுக்குள் சிக்கிய அந்த உடல்கள் மடிந்தால் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இது சுழலும் போது அது ஈர்ப்புக்குள் சிக்கிவிடும்.
மூன்றும் இரண்டறக் கலந்து இப்படி எந்தெந்தச் செடிகளின் உணர்வுடன் கலக்கின்றதோ அவை மூன்றும் மோதும் போது ஒரு கருவாக இணைகின்றது.
உயிரணுவின் அணுக்களும் தாவர இன அணுக்களும் மற்ற விஷச் செடியின் அணுக்களும் மோதலில் இதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன்கள் இழுத்து வெப்பமாகி இது இரண்டறக் கலந்து விடுகின்றது.
1.மோதும் போது ஆவியாக மாறி மேலே செல்லுகின்றது.
2.மோதலில் இணைந்த அந்தக் கருக்கள் புவியின் ஈர்ப்புக்குள் வருகின்றது.
3.புவி ஈர்ப்புக்குள் பட்டபின் மின்னல் தாக்கிய பின் அது ஒரு வித்தின் தன்மை உருவாகி அது செடியாக மாறுகின்றது.
அப்போது எந்த மிருகங்களின் உடலிலிருந்து இந்த உணர்வுகள் வந்ததோ இங்கே படர்ந்திருப்பதை அந்தச் செடி கவர்கின்றது.
எந்தச் செடியின் சத்தை மற்றது இணைந்திருந்ததோ அதைக் கவர்கின்றது.
எந்த விஷச் செடியின் சத்தை அது கவர்ந்தோ அது இதனுடன் இணைகின்றது.
இப்படி இணைந்து அது ஒரு செடியாக வரப்படும் போது இது இரத்தத்தால் இரத்தம் கலந்த நிலையில் இருப்பதனால் இந்தச் செடி இரத்தம் உள்ள பிராணிகள் ஏதாவது சென்றால்
1.அங்கே அந்த இலை நுனி பட்டால் போதும்.
2.நமக்கே தெரியாது. இரத்தத்தை உறிஞ்சி எடுத்து விடும்
3.பின் செத்து மடிய வேண்டியது தான்.
ஆனால் ஊரில் இருக்கும் போது அவர் இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பிக்கும்போது ஏதோ..., “பைத்தியம் பிடித்த நிலையில் தான் இருக்கிறார்...” என்று யாம் எண்ணினோம்.
அவர் உணர்த்திய உணர்வுகள் எனக்குப் புரியாத பாஷையில் புரிய வைத்துப் பதிய வைத்தார். ஆனால்
1.அந்தத் துணிகளைப் பார்க்கப்படும் போது
2.இந்த நிகழ்ச்சிகள் எமக்குத் தெரிகின்றது.
ஏனென்றால் இங்கே படர்ந்திருப்பதை நுகர முடிகின்றது.
எப்படி கம்ப்யூட்டர் அதில் செய்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் போது அந்த அதிர்வுகளை அந்த கம்ப்யூட்டரில் உள்ள நாடாக்களில் ஒலி ஒளி என்ற நிலையில் பதிவாக்குகின்றார்கள்.
அதன் வழி ரூபங்களைக் காணுகின்றான் விஞ்ஞானி.
ஆனால் மெய்ஞானி (நமது குருநாதர்) இப்படி காட்டச் சொன்னார்.
மற்ற தாவர இனங்கள் எப்படியெல்லாம் மாறியது? தாவர இனங்கள் உணர்வுகளை உட் கொண்டு உயிரணுக்கள் எப்படி வாழ்ந்தது? உயிரணுக்கள் மடிந்தபின் என்ன செய்யும்? என்று அறியும்படி செய்தார்.
தாவர இனங்களுக்குள்ளே இப்படிப் பல மலைப்பகுதிகளில் அதிகமாக விளைகின்றன, இப்பொழுது நகரங்களிலும் எடுத்துக் கொண்டால் கிராமங்களிலும் இதைப் போல மடிந்த நாய்களை அல்லது மற்ற மிருகங்களை மரத்தின் கீழ் போட்டோம் என்றால் இது உரமாகி விடுகின்றது.
மரத்தில் நல்ல காப்புகள் அதிகரிக்கின்றது. ஆனால் காப்புகள் அதிகரித்தாலும் அதிலிருந்து விளைந்த பழங்களைச் சாப்பிடும் போது அதன் குண நலன்கள் வருகின்றது.
இப்படியெல்லாம் சில உண்மையின் உணர்வுகளை குருநாதர் அறியும்படிச் செய்தார்.
இதைப் போல மனிதனுடன் வாழ்ந்த மற்ற உயிர் இனங்கள் நகரங்களில் கிராமங்களில் மடிந்தால் அதன் உணர்வுகள் மற்ற தாவர இனங்களுடன் இணைந்து விட்டால் அவைகளும் புது புது செடிகளாக விளைகின்றது.
தொட்டால் சிணுங்கி தொட்டால்வாடி போன்ற சில செடிகள் கொடிகள் விளைகின்றது. இவை எல்லாம் உயிர் அணுக்களின் மாற்ற நிலைகள்.
இயற்கையின் பேருண்மைகளை அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகளை குருநாதர் எமக்கு எவ்வாறு உணர்த்தினார் என்பதையும் எவ்வாறு அறியச் செய்தார் என்பதையும் அதே வழியில் உங்களுக்கும் உபதேசிக்கின்றோம்.
இதைப் பதிவாக்கி நினைவு கொண்டால் எனக்கு எப்படி அவர் பதிவு செய்த உணர்வுகள் நான் செல்லும் இடங்களில் உண்மைகளை உணர்த்தியதோ அதே போல் நீங்களும் அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகளைக் காண முடியும்.
எமது அருளாசிகள்.
11. காட்டுக்குள் அழைத்துச் சென்று பல இன்னல்களைக் கொடுத்துத்தான் “மகரிஷிகளைப் பற்றி…” உணர்த்தினார் குருநாதர்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை நுகர்ந்தறியும் சந்தர்ப்பம் வேடனான வான்மீகிக்குக் கிடைத்தது.
எந்த உண்மையை அகஸ்தியர் கண்டுணர்ந்தாரோ அதை வான்மீகியும் உணர்ந்தறிந்து வெளிப்படுத்தினார்,
1.வேடனான வான்மீகிக்குக் கிடைத்த சந்தர்ப்பம் போல
2.அகஸ்தியனுக்குக் கிடைத்த சந்தர்ப்பம் போல
3.உனக்கும் (ஞானகுரு) ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் துன்பத்தை ஊட்டி
4.உண்மையின் உணர்வை அறியச் செய்வதற்காக
5.உன்னைக் காட்டிற்குள் அழைத்து வந்தேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகிறது? இந்த இயக்கத்தின் தன்மைகளை நீ எவ்வாறு உணரப் போகின்றாய்?
1.எவ்வாறு இதை உணர்கின்றாய்?
2.எவ்வழியில் நீ உணரப் போகின்றாய்?
3.எவ்வழியில் நீ செயல்படுத்தப் போகின்றாய்? என்றார் குருநாதர்.
இங்கே காட்டுப் பகுதியில் நான் வரப்படும் பொழுது எனக்கு உணவு இல்லை. சரியான உறக்கம் இல்லை.
அதே சமயத்தில் காட்டுப் பகுதியில் அட்டைகள் அதிகம். என்னை அறியாமலே அட்டைகள் ஒட்டிக் கொள்கின்றது. அது இரத்தத்தைக் குடிக்கின்றது. எனக்குத் தெரியாது.
ஆக காட்டிற்குள் சாப்பாடு குறைவு. இருக்கிற இரத்தத்தை அது சாப்பிடுகிறது. அப்போது எனக்கு மயக்கமே வந்து விடுகிறது.
சாமி…! என்றேன் குருநாதரிடம் நான்.
நீ உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உன்னை எது இயக்குகின்றது? அந்த உணர்வு இயக்குவதிலிருந்து நீ எப்படி மீள வேண்டும் என்பதனை உணர்வதற்குத் தான் உனக்கு இத்தகைய அனுபவம்.
குருநாதர் என்னைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று அகஸ்தியன் கண்ட உண்மை அந்த வான்மீகி அவருக்குள் பட்டுத் தீமையை அகற்றும் வலிமையை எப்படிப் பெற்றார்…?
அவருடைய சந்தர்ப்பம் தீமையை நீக்கும் ஆற்றலை எப்படி நுகர்ந்தார் என்ற உண்மையை உணர்த்துவதற்கு என்னை இப்படித் துன்பக் கடலில் ஆழ்த்தினார்.
இந்தத் துன்பத்தின் நிலைகளிலிருந்து நீ பெறும் உண்மையை அறியப்படும் பொழுது தான் ஒவ்வொரு மனிதனுக்கும் சந்தர்ப்பங்களில் நல்ல உணர்வுகளை மாற்றும் நிலைகளை நீ உணர முடிகின்றது.
1.நல்லதைப் பெறவேண்டும் என்று ஆசை கொண்டு வந்தாய்.
2.ஆனால் இடைமறித்து உன்னை எப்படி எல்லாம் இவை மாற்றுகின்றது.
3.ஆனால் எதற்குள் நீ சிக்குகின்றாய்? நீ எதைப் பெற இங்கே வந்தாய்?
4.நீ எதைப் பெறவேண்டும்? நீ எதன் வழியில் நீ வாழ வேண்டும்?
5.உனக்குள் எதை வலுபெறச் செய்ய வேண்டும்? என்பதை உணர்த்துவதற்குத்தான்
6.உன்னைக் காட்டிற்குள் அழைத்து வந்தேன். என்று குருநாதர் கூறினார்.
வான்மீகி (முதலில்) முரடன். நீயும் ஒரு முரடன் தான். நீயும் அடிக்கடி குற்றம் செய்பவன் தான். குற்றத்தை எதனால் நீ செய்கின்றாய்? குற்றவாளியாக நீ எப்படி ஆகின்றாய்?
ஆக உன்னுடைய சந்தர்ப்பமே உன்னைக் குற்றவாளியாக்குகின்றது.
அந்தக் குற்றத்திலிருந்து மீளும் உணர்வும் அதனுடைய சக்தியும் நீ பெறுவதற்காக வேண்டி இயற்கையின் நிலைகள் எவ்வாறு இயங்குகிறது என்ற நிலையை நீ உணர உன்னைக் காட்டுப் பகுதிக்கு அழைத்து வந்தேன்.
1.அதனதன் பசிக்கு அதனதன் உணர்ச்சிகளை உந்துகின்றது.
2.அதனதன் செயலாக்கங்களைச் செயலாக்குகின்றது.
காட்டுக்குள் இருக்கும் கொசுக்கள் மிகவும் கடுமையானது. காட்டுக்குள் ஒரு விதமான கண்ணுக்குப் புலப்படாத ஈக்கள் உண்டு. மேலே பட்டால் அரிப்புகள் ஏற்படும்.
அரிப்பு ஏற்படும் பொழுது நீர் போன்று வடியும். நாம் தேய்ப்போம். அதில் வேர்வை போன்ற நீர் வெளியே வரும். அதை அந்த ஈக்கள் எப்படி உணவாக உட்கொள்கின்றது. இவை உன் கண்ணுக்குப் புலப்படாது.
ஆனால் உடலில் அரிப்பு வரும் பொழுது நீ தேய்க்கின்றாய். இப்போது பார்…! இந்த அணுக்கள் எவ்வாறு உருப்பெற்றது. இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகின்றது. அது ஜீவன் உள்ளதாக எப்படி இருக்கின்றது.
உன் கண்ணுக்கே புலப்படவில்லை. ஆனால் அணுத்தன்மை வருகின்றது. உன் உடலில் எப்படி அரிக்கின்றது? அரிப்பின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது? நீ எதை இயக்குகின்றாய்..? நீ எதைப் பெற வந்தாய்…?
1.நான் உபதேசிக்கும் நிலைகளிலிருந்து உனது நினைவலைகள் எவ்வாறு மாறுகின்றது?
2.இதிலிருந்து உன் நினைவலைகளை எவ்வாறு மாற்றவேண்டும்?
3.எதன் வலிமையை நீ பெறவேண்டும் என்று பல வினாக்களை எழுப்பினார் குருநாதர்.
இப்படி ஒவ்வொரு நொடியிலேயும் இயற்கையின் இயக்கங்களை உணரும்படி அந்தப் பக்குவ நிலையைப் பெறுவதற்குத்தான் எம்மைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
காட்டுக்குள் அழைத்துச் சென்று இந்த உண்மையின் இயக்கங்களைத் தான் அறிந்த உண்மையை உணர்வாக வெளிப்படுத்திக் காட்டினார் குருநாதர்.
அகஸ்தியன் கண்ட உண்மையின் உணர்வுகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தி கவரப்பட்டு அலைகளாகப் படர்ந்துள்ளது.
இரண்டு பட்சிகள் கூடிக் குழாவி மகிழ்ந்திருந்த வேளையில் வேடனான வான்மீகி ஒன்றை வீழ்த்தினார்.
அந்தப் பட்சியின் பாச உணர்வுகள் தாக்கப்பட்ட நிலையில் வானை நோக்கி ஏகும் பொழுது சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்திருந்த அகஸ்தியனின் உணர்வலைகள் வான்மீகி உடலுக்குள் வருகின்றது.
அந்தப் பட்சியின் காரணமாக அகஸ்தியனின் உணர்வுகள் வான்மீக்கு உண்மையை உணர்த்தி அவருக்குள் இருந்த தீமையின் நிலைகளை அகற்றி தெளிந்த மனம் கொண்டு உலகுக்கே உண்மைகளை இராமாயணக் காவியமாக வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு மகரிஷியும் எப்படி விண்ணின் ஆற்றலையும் அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் பெற்றார்கள்? ஒளியின் சரீரமாக எப்படி ஆனார்கள்?
அந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பெற முடியும்? விண் செல்லும் அந்த மார்க்கம் என்ன என்பதை அறிந்துணர்வதற்காகக் காட்டிற்குள் பல இன்னல்களைக் கொடுத்து உணர்த்தியருளினார் குருநாதர்.